Bigg Boss Tamil Season 8: முதல் ஓபன் நாமினேஷன்; அதிரடி காட்டிய பிக் பாஸ்., வெதும்பிப்போன தர்ஷிகா., முத்துகுமரனின் ஆட்டம் ஆரம்பம்.!
ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக் உட்பட 10 பேர் ஐந்தாவது வாரத்தில் ஓபன் நாமினேஷன் முறையில், பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகளே, அவர்களுக்கான மேற்படி விளையாட்டை உறுதி செய்யும்.
நவம்பர் 04, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்த நிலையில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்காவது வாரத்தில் எந்த விதமான எவிக்சன் இல்லை. Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழில் வைல்ட் கார்ட் என்ட்ரி யார்? முழு விபரம் இதோ.. கிலியில் போட்டியாளர்கள்.!
6 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி:
இதனிடையே, நேற்று பிக் பாஸ் இல்லத்திற்குள் ராயன், சிவகுமார், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட், ராணவ், ரியா தியாகராஜன் ஆகியோர் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் வீட்டில் இருப்போரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இது வரும் வாரங்களில் டபுள் எவிக்சன் பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.
முதல் ஓபன் நாமினேஷன்:
இந்நிலையில், வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்ததால், இன்று (Bigg Boss Tamil Today Episode) பிக் பாஸ் வீட்டில் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதன்படி, போட்டியாளர்கள் பலரும் அதிருப்தி சூழலில் ஓபன் நாமினேஷனை பதிவு செய்த நிலையில், மொத்தமாக தற்போது ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். இதில் தர்ஷிகா சவுந்தர்யாவிடம் முத்துவின் கேம் தொடர்பாக விவாதிக்கிறார். இதனால் முத்துக்குமரன் மீண்டும் தனது ஆட்டத்தை ஆடியது உறுதியாகிறது. அதேபோல, சிவகுமார் பவித்ராவிடம் அடுத்தவர் பேசுவார் எனவா விளையாட வந்தீர்கள்? நீங்கள் பேசுங்கள் என கூறுகிறார். ஆகமொத்தம் பிக் பாஸ் வீடு கலைகட்டி இருக்கிறது.
ஓபன் நாமினேஷன் ப்ரோமோ காட்சிகள்:
எலிமினேஷன் லிஸ்டில் யார்? ப்ரோமோ இதோ: