Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழில் வைல்ட் கார்ட் என்ட்ரி யார்? முழு விபரம் இதோ.. கிலியில் போட்டியாளர்கள்.!
சிவகுமார், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட் உட்பட 6 பேர் வைல்ட் கார்ட் போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 03, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். Bigg Boss Tamil Season 8: செருக்குடன் சீரிய குமரனை, கிரீடம் கதை சொல்லி ஆப் செய்த விஜய் சேதுபதி; இன்னைக்கி மாஸ் சம்பவம் லோடிங்.!
வெளியேறிய 3 பேர்:
ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் தீபாவளி காரணமாக போட்டியாளர்களிடையே எலிமினேஷன் இல்லாத நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் புதிதாக 6 நபர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக நுழைந்துள்ளார். Rajinikanth Wish to Team Amaran: அமரன் திரைபடக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்; மகிழ்ச்சியில் படக்குழு.!
6 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரி:
அதன்படி, ராயன் (Rayan), சிவகுமார் (Shiva Kumar), மஞ்சரி நாராயணன் (Manjari Narayanan), வர்ஷினி வெங்கட் (Varshini Venkat), ராணவ் (Raanav), ரியா தியாகராஜன் (Riya Thiyagarajan) ஆகியோர் வீட்டிற்குள் கூடுதலாக நுழைந்துள்ளார். ஏற்கனவே 15 நபர்கள் வீட்டில் இருந்த நிலையில், தற்போது எவிக்சன் இல்லாமல் கூடுதலாக 6 பேர் அனுப்பி வைக்கப்பட்டு, மொத்தமாக பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் டபுள் எவிக்சன் இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.
பிக் பாஸ் இல்லத்திற்குள் ராணவ்:
#பிக்பாஸ் இல்லத்தில்.. #Raanav 😎 Bigg Boss Tamil Season 8 - இப்போது ஒளிபரப்பாகிறது.. நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason8 #TuneInNow #VijayTelevision #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil pic.twitter.com/6wKo9VauC6
— Vijay Television (@vijaytelevision) November 3, 2024
பிக் பாஸ் இல்லத்திற்குள் சிவகுமார்:
#பிக்பாஸ் இல்லத்தில்.. #ShivaKumar 😎 Bigg Boss Tamil Season 8 - இப்போது ஒளிபரப்பாகிறது.. நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason8 #TuneInNow #VijayTelevision #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu pic.twitter.com/1qT4UAV3eM
— Vijay Television (@vijaytelevision) November 3, 2024
பிக் பாஸ் இல்லத்தில் ரியா தியாகராஜன்:
#பிக்பாஸ் இல்லத்தில்.. #RiyaThiyagarajann 😍 Bigg Boss Tamil Season 8 - இப்போது ஒளிபரப்பாகிறது.. நம்ம விஜய் டிவில.. #Nowshowing #BiggBossTamilSeason8 #TuneInNow #VijayTelevision #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 pic.twitter.com/EEBGIvuFRm
— Vijay Television (@vijaytelevision) November 3, 2024
(The above story first appeared on LatestLY on Nov 03, 2024 10:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

