Bigg Boss Tamil Season 8: மஞ்சரி போடும் புதிய திட்டம்.. கொந்தளிக்கும் பெண் போட்டியாளர்கள்.. வீடியோ உள்ளே.!

பெண் போட்டியாளர்களில் ஒருவரை தெரிவு செய்து ஆண்கள் அணிக்கு அனுப்புவதற்கான முயற்சியில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

Bigg Boss Tamil Season Promo (Photo Credit: @VijayTelevison X)

நவம்பர் 11, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்த நிலையில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்காவது வாரத்தில் எந்த விதமான எவிக்சன் இல்லை.

ஐந்தாவது வார எலிமினேஷன் லிஸ்ட்:

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் ராயன், சிவகுமார், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட், ராணவ், ரியா தியாகராஜன் ஆகியோர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த வாரத்திற்கான நாமினேஷனில் ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அதில் சுனிதா வெளியேறினார். Sathyaraj's Wife In Coma: 4 வருடமாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி.. காரணம் என்ன?!

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ:

தற்போது ஆறாவது வாரத்தில் இருக்கும் போட்டியாளர்கள், ஆண்கள் அணிக்கு பெண் போட்டியாளர் ஒருவரை அனுப்பும் முயற்சியில் இருக்கிறார்கள். அதில் பெண் போட்டியாளர்கள் கூறும் கருத்திற்கு வைல்ட் கார்ட் போட்டியாளர் மஞ்சரி பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறார். யாரை அனுப்பலாம் என்பதனை முடிவெடுக்க விடாமல் எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement