Sathyaraj's Wife In Coma: 4 வருடமாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி.. காரணம் என்ன?!

சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமா கண்டிஷனில் இருக்கும் தகவலை அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறினார்.

Sathyaraj's Wife In Coma: 4 வருடமாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி.. காரணம் என்ன?!
Sathyaraj | Maheshwari (Photo Credit: @Instagram)

நவம்பர் 11, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் சத்யராஜ் (Sathyaraj). வில்லன், குணச்சித்திர நடிகர், துணை நடிகர், ஹீரோ என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவருக்கு மகேஸ்வரி என்பவருடன் 1979 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு திவ்யா என்ற மகளும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். மகள் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யா சமீபத்தில் தன்னுடைய அம்மா பற்றி பகிர்ந்தகொண்டுள்ளார். Actor Kamal Haasan: "உலகநாயகன் பட்டம் வேண்டாம்" - நடிகர் கமல் ஹாசன் பரபரப்பு அறிவிப்பு.. காரணம் என்ன? விபரம் உள்ளே.!

திவ்யா சத்யராஜ் (Divya Sathyaraj) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "சிங்கிள் பேரன்ட்கள் அனைவரையும் பாராட்ட வேண்டிய பதிவு இது. கடந்த 4 ஆண்டுகளாக என் அம்மா கோமாவில் இருந்து வருகிறார். அவரை வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டு வருகிறோம். அவருக்கு PEG டியூப் மூலம் தான் உணவளித்து வருகிறோம். அவரின் மருத்துவ முன்னேற்றத்திற்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். எங்கள் அம்மா பழைய மாதிரி திரும்பவும் கிடைப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அம்மா கோமாவில் இருப்பதால் அப்பா தனியாளாக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாக இருக்கிறார். அது போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய், அதாவது என் பாட்டியும் தவறிவிட்டார்கள். இதனால் நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன். நானும் அப்பாவும் சக்திவாய்ந்த தாய்களாக மாறி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

திவ்யா சத்யராஜ் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Divya Sathyaraj (@divya_sathyaraj)

(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).