Road Accident: பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; 5 பேர் பலி.. 20 பேர் படுகாயம்..!

மகாராஷ்டிராவில் பேருந்து மீது கார் மோதிய பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Car-Bus Accident in Buldhana (Photo Credit: @ians_india X)

ஏப்ரல் 02, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் ஷேகான்-காம்கான் நெடுஞ்சாலையில் (Shegaon-Khamgaon Highway) வேகமாக வந்த கார் ஒன்று பேருந்து மீது மோதி (Car-Bus Accident) விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்தில், பின்னால் இருந்து வந்த தனியார் பயணிகள் பேருந்து, ஏற்கனவே சேதமடைந்த வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. Bangalore Teacher: மாணவரின் தந்தையுடன் கள்ளக்காதல்.. பெண் ஆசிரியையின் சேட்டை.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்.!

சாலை விபத்து:

மூன்று வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு:

இதுகுறித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்ததால், நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement