Bangalore Teacher Honey Trap Case (Photo Credit: @thetatvaindia / @IndiaToday X)

ஏப்ரல் 01, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கடந்த 2023ம் ஆண்டு 5 வயதுடைய சிறுவனை, அவரின் தந்தை படிக்க சேர்த்தார். அட்மிஷனின் போது, பள்ளியின் ஆசிரியையாக இருந்த ஸ்ரீதேவி ருதாகி (Sridevi Rudagi) என்ற 25 வயதுடைய இளம் பெண் ஆசிரியை, சிறுவனின் தந்தையுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த பழகத்தின்பேரில் மாணவரின் நலனை மேம்படுத்துவதுபோல சிறுவனின் தந்தை மனதில் இடம்பிடித்தவர், பின்னாளில் மயக்க பேசி இருக்கிறார். இதனால் மகனுக்கு படிப்பு சொல்லித்தந்த வில்லங்க ஆசிரியையுடன் பழக்கத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை, பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை சிறுவனின் தந்தைக்கே தெரியாமல் பெண் வீடியோ, புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டில் சிறுவனின் தந்தையிடம் ரூ.4 இலட்சம் வாங்கிய பெண்மணி, இறுதியில் ரூ.20 இலட்சம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். டிவி ரிமோட்டுக்கு நடந்த சண்டை; 7 வயது சிறுமி கழுத்து நெரித்துக்கொலை.! 

குற்றச்செயலில் ஈடுபட்ட பெண் ஆசிரியை, கூட்டாளிகளுடன் கைது:

மேலும், பணத்தை கொடுக்கவில்லை என்றால், தனிமை போட்டோ லீக் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இதனால் பதறிப்போனவர் ரூ.1 இலட்சத்தை கொடுத்த நிலையில், ரூ.20 இலட்சம் கேட்டு மிரட்டல் தொடர்ந்ததால் மகனையும் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளார். குடும்பத்துடன் குஜராத் சென்றுவிடலாம் என நினைத்தவர், மகனின் மாற்றுச்சான்றிதழை கேட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது, ஆசிரியை மீண்டும் சிறுவனின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் தவித்துப்போன சிறுவனின் தந்தை, இறுதியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஆசிரியை ஸ்ரீதேவி, அவரின் கூட்டாளிகள் கணேஷ் காலே (28), சாகர் (38) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் ஹனி டிராப் (Honey Trap Case) முறையில் சிறுவனின் தந்தையை கள்ளக்காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்ததும் அம்பலமானது.