கோயில் சுவர் இடிந்து விபத்து.. பக்தர்கள் 9 பேர் பரிதாப பலி..!
விசாகப்பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்த விபத்தில், பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 30, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் (Visakhapatnam) ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சந்தன உற்சவ விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கோயிலில் புதிதாக கட்டப்பட்டிருந்த 20 அடி நீளமுள்ள சுவர், இன்று (ஏப்ரல் 30) அதிகாலை இடிந்து விழுந்தது. அப்போது, சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் மீது விழுந்துள்ளது. Kolkata Hotel Fire Accident: கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் 14 பேர் பலி.. தமிழர்கள் 3 பேர் மரணம் உறுதி.. காலையிலேயே துயர செய்தி.!
9 பேர் பலி:
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணை:
விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.