Tree Fell on Female Teacher: மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து; பெண் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி..!

பீகாரில் திடீரென மரக்கிளை முறிந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்த முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது விழுந்தது. இதில் பெண் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tree Fell on Female Teacher (Photo Credit: @EktaChaubey10 X)

ஜனவரி 29, முசாபர்பூர் (Bihar News): பீகார் மாநிலம், முசாபர்பூரில் (Muzaffarpur) நேற்று முன்தினம் (ஜனவரி 27) அதிகாலையில் பயங்கர விபத்து நடந்தது. சாலையில் திடீரென மரக்கிளை முறிந்து, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது விழுந்தது. இதில், பெண் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் பள்ளி முதல்வர் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Maha Kumbh Stampede: கும்பமேளாவில் பயங்கரம்.. முண்டியடித்து பக்தர்களால் கூட்டநெரிசல்.. 50 பேர் படுகாயம்..!

மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து:

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது, மரக்கிளை முறிந்து விழுந்து விபத்து (Road Accident) ஏற்பட்டது. விபத்தில் சிக்கியவர்களை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்த பெண் ஆசிரியை விசாகா என அடையாளம் காணப்பட்டார். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரான இவர், பள்ளி முதல்வர் பூல்பாபு ராயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாள். இருவரும் மீனாபூர் தொகுதியின் தாலிம்பூர் நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் முதல்வர் புல்பாபு ராயி ஹெல்மெட் அணிந்ததால் அவரது உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement