Maha Kumbh Stampede: கும்பமேளாவில் பயங்கரம்.. முண்டியடித்து பக்தர்களால் கூட்டநெரிசல்.. 50 பேர் படுகாயம்..!

ஆன்மீக பக்தர்கள் கோடிக்கணக்கில் திரளும் திரிவேணி சங்கமம் மகா கும்ப மேளாவில், திடீரென முண்டியடித்த பக்தர்களால் 50 பேர் காயமடைந்தனர்.

Maha Kumbh Stampede: கும்பமேளாவில் பயங்கரம்.. முண்டியடித்து பக்தர்களால் கூட்டநெரிசல்.. 50 பேர் படுகாயம்..!
Maha Kumbh Mela 2025 Stampede (Photo Credit: @soutikBBC X)

ஜனவரி 29, ப்ரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் (Prayagraj) மாவட்டத்தில் உள்ள கங்கை நதிக்கரையில், இன்று திரிவேணி சங்கமம் (Triveni Sangam) அமாவாசை (Amavasai) நிகழ்வையொட்டி, ஆன்மீக பக்தர்கள் பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, புனித நீராட சென்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மகா கும்ப மேளா (Maha Kumbh Mela 2025) வெகுவிமர்சையாக நடைபெறும் நிலையில், இந்த ஆண்டில் அளவுக்கு அதிகமான ஆன்மீக பக்தர்கள் ப்ரயாக்ராஜ் சென்றுள்ளனர். சுமார் 15 நாட்களில் 15 கோடி பேர் ப்ரயக்ராஜ் நகரில் புனித நீரை சென்று வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. Gujarat Shocker: அந்தரங்க உறுப்பில் கம்ப்ரசர் குழாயை சொருகிய உறவினர்.. வாலிபர் உயிரிழப்பு..!

50 பேர் காயம் என தகவல்:

இன்று அமாவாசையை முன்னிட்டு இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடி, அதிகாலை நேரத்தில் புனித நீராட முற்பட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசல் உண்டாகி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மகா கும்ப மேளாவில் முன்னேற்பாடு நடவடிக்கை, அவசர உதவி மையங்கள், குடியிருப்பு குடில்கள் போன்றவை மாநில அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Boy Dies After Horse Kicks: குதிரை உதைத்து சிறுவன் பலி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..! 

பிரதமர் மோடி நிலவரம் கேட்டறிந்தார்:

இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசல் தொடர்பான தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து இருக்கிறார். மேலும், பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கும்ப மேளா நடைபெறும் பகுதிக்கு செல்லும் அனைத்து வழிகளையும் தற்காலிகமாக அடைத்து இருக்கின்றனர். உயிர்பலி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).