13 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் தொல்லை.. ஆசிரியை கைது..!

குஜராத்தில் ஆசிரியை ஒருவர், பள்ளி மாணவரை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teacher Kidnapped & Sexually Harassed a Student in Gujarat (Photo Credit: @gujjuallrounder X)

மே 02, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலம், சூரத்தில் (Surat) இருந்து 13 வயது பள்ளி மாணவனை காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அதன்பின்னர், தொடர்ந்து 3 நாள் தேடுதலுக்குப் பிறகு, குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் இருவரையும் கண்டுபிடித்தனர். 'க்ளீன் சேவ்' செய்ய மறுத்த கணவர்.. மைத்துனருடன் ஓட்டம் பிடித்த மனைவி.., விசாரணையில் அதிர்ச்சி..!

ஆசிரியை கைது:

இதுகுறித்த விசாரணையின்படி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, ஆசிரியை மான்சி (வயது 23), சிறுவனுடன் சூரத்திலிருந்து புறப்பட்டு பேருந்தில் அகமதாபாத்தையும், பின்னர் வதோதரா வழியாக டெல்லியையும் அடைந்தார். அங்கிருந்து, இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று 2 இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவன் மீட்கப்பட்டு ஆசிரியை மான்சி கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 127இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement