'க்ளீன் சேவ்' செய்ய மறுத்த கணவர்.. மைத்துனருடன் ஓட்டம் பிடித்த மனைவி..!
உத்தர பிரதேசத்தில் தாடியை 'க்ளீன் சேவ்' செய்ய கணவர் மறுத்ததால் மனைவி தனது மைத்துனருடன் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 02, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட் (Meerut) மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜாகிர் என்பவருக்கு, அர்ஷி என்ற பெண்ணுடம் 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முகமது ஜாகிர், அதிகளவு தாடி வளர்த்திருந்தார். தாடியை 'க்ளீன் சேவ்' செய்யும்படி, அர்ஷி பலமுறை வலியுறுத்தினார். ஆனால், அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 90 ஆண்டுகளுக்குப் பின் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
கணவர் பரபரப்பு புகார்:
இதனிடையே, முகமது ஜாஹிர் சகோதரர் ஷபிருடன், அர்ஷிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளைடைவில் இது காதலாக (Love Affair) மாறியது. இவர்கள் இருவரும், கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றனர். 3 மாதங்களாகியும் மனைவி வீட்டுக்கு வராததை அடுத்து, முகமது ஜாஹிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் 'நான் தாடி வளர்ப்பது எனது மனைவிக்கு பிடிக்கவில்லை. அவர், என் சகோதரர் ஷபிருடன் ஓடிவிட்டார். இருவரும் என்னை கொலை செய்ய சதித்திட்டம் போட்டுள்ளனர்' என முகமது ஜாஹிர் புகார் அளித்துள்ளார்.
கணவரின் தம்பியை திருமணம் செய்த மனைவி:
இதனிடையே, பெற்றோர் வீட்டுக்கு ஷபிருடன் அர்ஷி சமீபத்தில் வந்தார். இருவரையும் காவல்நிலையத்துக்கு அர்ஷியின் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது, 'முகமது ஜாஹிருடன் வாழ விருப்பமில்லை. தாடி தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை. அவர் பாலியல் ரீதியாக தகுதியற்றவர். ஷபிருடன் வாழ விரும்புகிறேன்' என அர்ஷி கூறினார். இதைக்கேட்டு மனமுடைந்த முகமது ஜாஹிர் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 02, 2025 12:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

