Doctors Beat Old Man: முதியவரை தரதரவென இழுத்து சென்ற மருத்துவர்.. அதிர்ச்சிகர சம்பவம்..!

மத்திய பிரதேசத்தில் முதியவரை மருத்துவர்கள் கொடூரமாக அடித்து இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Doctors Brutally Beating Elderly Patient in MP (Photo Credit: @ndtvindia X)

ஏப்ரல் 21, சத்தர்பூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஒரு மருத்துவர் 77 வயது முதியவரை அடித்து, பின்னர் அவரை மருத்துவமனை வாசலில் தரதரவென இழுத்துச் செல்கிறார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சம்பந்தப்பட்ட மருத்துவர் அதிலிருந்து தப்பியோடுவதையும் காணமுடிகிறது. வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, சத்தர்பூர் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்து புகார் எழுந்தது. Husband Dies By Suicide: மனைவி, மாமியார் தொடர் தொல்லை.. கணவர் விபரீத முடிவு..!

முதியவரை இழுத்துச் சென்ற மருத்துவர்:

இதுகுறித்த விசாரணையில், உதவ்லால் ஜோஷி என்ற முதியவர் தனது மனைவியை வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருவரும் மருத்துவமனை வரிசையில் காத்திருந்தபோது, அங்கு வந்த மருத்துவர், கூட்டத்தைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறீர்கள்? எனக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மருத்துவர் முதியவரின் கன்னத்தில் அறைந்ததாகவும், பின்னர் அவரை இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கடும் நடவடிக்கை:

இதுதொடர்பாக, சத்தர்பூர் சுகாதார கண்காணிப்பாளர் மருத்துவர் ஜி.எல். அஹிர்வார் கூறுகையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, சம்மந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை இரக்கமின்றி இழுத்துச் செல்லும் அவலம்:

 

Lihat postingan ini di Instagram

 

Sebuah kiriman dibagikan oleh India Today (@indiatoday)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement