Husband Dies By Suicide: மனைவி, மாமியார் தொடர் தொல்லை.. கணவர் விபரீத முடிவு..!

உத்தர பிரதேசத்தில் மனைவி, மாமியார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகக் கூறி, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband Dies By Suicide: மனைவி, மாமியார் தொடர் தொல்லை.. கணவர் விபரீத முடிவு..!
Husband Dies By Suicide in UP (Photo Credit: @NCMIndiaa X)

ஏப்ரல் 21, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (Auraiya) மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ் (வயது 33). இன்ஜினியரான இவர், பிரியா என்பவரை காதலித்து, கடந்த 2 ஆண்டுக்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணமான பிறகு, இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், எட்டாவா மாவட்டத்துக்கு சென்ற மோஹித் யாதவ், அங்குள்ள ஹோட்டலில் உள்ள அறையில் துாக்கிட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன், மனைவி பிரியா மற்றும் அவரது தாய் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். புதுமணத்தம்பதிக்கு புளூ டிரம் பரிசு.. மணமக்களை ஷாக்கில் ஆழ்த்திய மணமகன் தோழர்கள்..!

கொலை மிரட்டல்:

இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீடியோவில் அவர் கூறுகையில், பிரியாவின் கருவை கலைக்கக் கோரி அவரது தாய் வற்புறுத்தி வருகிறார். நகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கிறார். அவருடன் சேர்ந்து, மனைவி பிரியாவும் என்னை மிரட்டி வருகிறார். என் வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தரவில்லை என்றால், என்னையும், என் குடும்பத்தினரையும் வரதட்சணை கொடுமை வழக்கில் கைதாக வைப்பேன் என பிரியா மிரட்டி வருகிறார். மேலும், அவரது தந்தை மனோஜ் குமார், எனக்கு எதிராக பொய் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

கணவர் தூக்கிட்டு தற்கொலை:

இதனையடுத்து, பிரியாவின் சகோதரர் என்னை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். இறுதியாக, என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா. நான் இறந்த பின்னும் நீதி கிடைக்காவிட்டால், என் சாம்பலை சாக்கடையில் வீசுங்கள். இவ்வாறு அந்த வீடியோவில் கண்ணீர் மல்க மோஹித் யாதவ் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 11:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).