Woman Gang Rape: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவில் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

அசாமில் கோவிலில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gang Rape (Photo Credit: Pixabay)

டிசம்பர் 14, கவுகாத்தி (Assam News): அசாம் மாநிலம், கவுகாத்தி (Guwahati) பகுதியில் பிரபலமான இந்துக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் டிசம்பர் வரை கோலாகலமாக திருவிழா நடைபெறும். இந்நிலையில், அந்தக் கோயில் அருகே ஒரு பெண்ணை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், வீடியோவில் காணப்படும் 9 நபர்களின் முகத்தை அடையாளம் கண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். Bomb Threat: வெடிகுண்டு மிரட்டல்! திடீரென பள்ளிகளுக்கு வந்த மெயில்.. பதறிய பெற்றோர்கள்..!

இதனையடுத்து, கவுகாத்தி பகுதியில் இருந்த சம்பந்தப்பட்ட 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், ஒரு நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை கோயில் திருவிழாவுக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது, போதைப் பழக்கத்தில் இருந்த 9 பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். இதனை, அந்த கும்பலில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குல்தீப் நாத், மிரினால் ரபா, பிஜாய் ரபா, பிங்கு தாஸ், கஹன் தாஸ், தியாபங்கர் முகியா, சவ்ரவ் போரோ ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.