டிசம்பர் 13, டெல்லி (Delhi News): டெல்லியில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த மாதம் டிசம்பர் ஒன்பதாம் தேதி அன்று சுமார் 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அது வெறும் புரளி தான் என்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இன்று மெயில் மூலம் சுமார் மூன்று பள்ளிகளுக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலினைத் தொடர்ந்து பள்ளிகளில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். Astrology: 2025 ஆம் ஆண்டு சுவாதி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
இதுபோல் ஒவ்வொரு முறையும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் போது அது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லச் செய்யப்படுகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் ஆழ்ந்த அச்சத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.