Anmol Bishnoi Arrested: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அமெரிக்காவில் கைது..!

பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Anmol Bishnoi (Photo Credit: @IGaganBindal X)

நவம்பர் 19, மும்பை (Maharashtra News): குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி சிறையில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) உள்ளார். இவர், சிறையில் இருந்தபடியே பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. Ragging: ராக்கிங் கொடுமையால் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்.. 3 மணிநேரம் சித்ரவதை செய்த கொடூரம்..!

இந்நிலையில், அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் (California) பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், அவரை கைது செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனையடுத்து, கலிபோர்னியாவில் அன்மோல் பிஷ்னோய் (Anmol Bishnoi) கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை வழக்கில் அன்மோலுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement