Ragging: ராக்கிங் கொடுமையால் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்.. 3 மணிநேரம் சித்ரவதை செய்த கொடூரம்..!
குஜராத்தில் ராக்கிங் கொடுமையால் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 18, பதான் (Gujarat News): குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் (Patan) தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக்கல்லூரி (GMERS Medical College) மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி மருத்துவம் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவம்பர் 16) மூத்த மாணவர்கள் சிலர் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவர்களை ராக்கிங் (Ragging) செய்துள்ளனர். Three Women Drown In Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பரிதாப பலி.. குடும்பத்தினர் சோகம்..!
அப்போது, சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்து, ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும்படி கொடுமைப்படுத்தியுள்ளனர். அதில், அனில் மெத்தானியா (வயது 18) என்ற முதலாமாண்டு மாணவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் மெத்தானியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 18, 2024 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

