Breaking: பாகிஸ்தானை மொத்தமாக முடித்துவிட்ட இந்தியா.. உடனடியாக அமலுக்கு வரும் உத்தரவுகள்.!
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தி இருக்கிறது.
ஏப்ரல் 23, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்கம் (Pahalgam Terrorist Attack) பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மரணடைந்த நபர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் தவித்து வருகின்றனர். உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்திய இராணுவம் மீண்டும் காஷ்மீரில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தேடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று மாலை தொடங்கிய அவசர அமைச்சரவை கூட்டம் சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மரண பயத்தில் அலறிய குழந்தைகள்.. "நாங்கள் இந்திய இராணுவம்.. உங்களை பாதுகாக்க வந்துள்ளோம்" ஆஸ்வாசப்படுத்திய அதிகாரிகள்..!
உடனடியாக அமல்படுத்தப்படும் முக்கிய உத்தரவுகள் என்னென்னெ?
1) அட்டாரி - வாஹா எல்லை உடனடியாக மூடப்படுகிறது.
2) பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றப்படுகின்றனர். ஒருவாரத்திற்குள் அவர்கள் வெளியேற வேண்டும்.
3) பாகிஸ்தானில் இருந்து மருத்துவம் உட்பட பிற விஷயங்களுக்கு இந்தியா வர அனுமதிக்கும் விசா ரத்து செய்யப்படுகிறது.
4) சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, சிந்து நதிநீர் இனி பகிர்ந்தளிக்கப்படமாட்டாது.
5) விசாவில் இதுவரை இந்தியா வந்து தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் 24 மணிநேரத்தில் தாமாக வெளியேற வேண்டும்.