Trending Video: மருத்துவரை கட்டி வைத்து அடித்த மக்கள்.. இரத்தம் சொட்ட சொட்ட நிகழ்ந்த பயங்கரம்.!

பெண்ணை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து ரத்தம் சொட்ட சொட்ட அடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Visual From Video (Photo Credit : @govindprataps12 X)

ஜூன் 04, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜிதேந்திர யாதவ். இவர் மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று தனது மகனின் உடல்நிலை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு சென்று இருந்த பெண் ஒருவரை மருத்துவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் மீது உள்ளூரில் நிலத்தகராறு ஒன்றும் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர் பெண்ணை பலாத்காரம் செய்த செய்தியறிந்த உள்ளூர் மக்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. RCB Victory Parade: பெங்களூரு வந்த கிங் கோலி.. ஓடோடி சென்று வரவேற்ற துணை முதல்வர்.. கப் அடித்த கொண்டாட்டத்தில் கர்நாடக மக்கள்.! 

மரத்தில் கட்டி வைக்கப்பட்ட மருத்துவர் :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement