RCB Victory Parade (Photo Credit : @ANI X)

ஜூன் 04, பெங்களூரு (Sports News): டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல்முறையாக தனது வெற்றி கோப்பையை கையில் ஏந்தியது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூர் விமான நிலையத்திற்கு வருகை தந்த விராட் கோலி, ரஜத் படிதாரை அம்மாநிலத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேரில் சென்று சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். RCB Arrived in Bengaluru: கோப்பையுடன் பெங்களூரு வந்தடைந்த ஆர்சிபி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

பூங்கொத்து கொடுத்து வரவேற்பு :

அதனை தொடர்ந்து இருவருக்கும் பூங்கோத்து கொடுக்கப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து ஆர்சிபி அணி பேச இருக்கிறது. தொடர் கொண்டாட்டங்களுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக பெங்களூர் நகரில் வெற்றி அணிவகுப்பு இருக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக அது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விராட் கோலியை கர்நாடக துணை முதல்வர் வரவேற்றது குறித்த வீடியோ :

ஆர்சிபி வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் (RCB Victory Parade Live):