புதுமணத்தம்பதிக்கு புளூ டிரம் பரிசு.. மணமக்களை ஷாக்கில் ஆழ்த்திய மணமகன் தோழர்கள்..!

கள்ளக்காதலில் கணவரை கொடூர கொலை செய்து டிரம்மில் அடைந்ததாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு மணமக்களுக்கு இளைஞர்கள் டிரம் பரிசு வழங்கிய சோகம் நடந்துள்ளது.

Married Couple Gift from Groom's Friends (Photo Credit: @pawanks1997 X)

ஏப்ரல் 20, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத், அவரின் மனைவி முஸ்கான் ரஸ்தோகி, மனைவியின் காதலர் ஷாகில் சுக்லா ஆகியோரால் கொடுரமாக கொலை செய்யப்பட்டார். ராஜ்புத்தின் உடல் துண்டு துண்டாக்கப்பட்டு, தண்ணீர் பிடித்து வைக்கும் நீல நிற பேரலில் வைத்து சிமெண்ட் கரைத்து ஊற்றி கொடூர கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருந்தது. இந்த விஷயம் குறித்த விசாரணையைத் தொடர்நது முஸ்கான் மற்றும் சாஹில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பல்சர் பைக்கில் பயங்கர வேகம்.. மின்கம்பத்தில் தலை மோதி இன்டெர்வியு சென்ற இளைஞர் பலி.! 

கொடூர சம்பவத்தால் பதறிய மக்கள்:

2016ல் திருமணம் முடிந்த தம்பதிக்கு 5 வயதுடைய குழந்தை இருக்கும் நிலையில், முஸ்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், காதல் மனைவியுடன் நேரத்தை செலவிட கடற்படை வேலையையும் எழுதிக்கொடுத்துவிட்டு வந்துள்ளார். சமீபத்தில் குடுமப்த்தின் நலனுக்காக லண்டன் சென்றும் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைக்காக மனைவி, குழந்தைகளை காண வந்தவருக்கு மனைவியின் கள்ளக்காதல் காரணமாக நடந்த கொடூரம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவத்துக்கு பின்னர் ஒருசிலர் தனது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து, மனைவியை அவரின் கள்ளகாதலர்களுக்கே திருமணம் செய்து வைத்தனர்.

திருமண பரிசாக புளூ டிரம்:

ஒருவர் மனைவி என்னை கொலை செய்திடலாம் என பயந்து காவல் நிலையத்தில் புகாரும் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில், மாநில அளவில் தண்ணீர் டிரம்மில் இளைஞர் கள்ளக்காதல் விஷயத்தில் கொடுரமாக கொலை செய்யப்பட்ட தகவல் மக்களிடையே தெரியவந்து பதற்றத்தை உண்டாக்கியது. இதனால் டிரம் விற்பனை கடுமையான சரிவை சந்தித்தது. இந்நிலையில், புதுமணத்தம்பதிகளுக்கு மணமகனின் நண்பர்கள் டிரம் பரிசு கொடுத்துள்ளனர். இதனால் எதுவும் பேச முடியாமல் தவித்த தம்பதி சிரித்துக்கொண்டு நிலைமையை சமாளித்தது. அங்குள்ள ஹமிர்பூரில் நடைபெற்ற திருமண விழாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம் பரிசு கொடுத்த மணமகன் தோழர்கள்:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement