Ooty Bike Accident (Photo Credit: YouTube)

ஏப்ரல் 19, உதகமண்டலம் (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி, கோராஞ்சல், அண்ணா நகரில் வசித்து வருபவர் தேவராஜ். இவரின் மகன் ஹரிஷ் (வயது 22), லேப் டெக்னீசியன் படித்து முடித்துள்ளார். நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நேர்காணலுக்கு சென்றார். ஹரிஷ் தனது நண்பர் விமலுடன் (வயது 26) இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரியவருகிறது. வாகனத்தை விமல் இயக்க, ஹரிஷ் பின்னால் இருந்தார். Tamilisai Soundararajan: அவுட் ஆப் கண்ட்ரோல் விவகாரம்.. சர்காரியாவை இழுத்துவிட்டு தமிழிசை கடும் தாக்கு..! 

தலைக்கவசத்தை சரியாக அணியவில்லை:

இவர்களின் வாகனம் அங்குள்ள ஊட்டி - கோவை நெடுஞ்சாலையில் உள்ள பாய்ஸ் கம்பெனி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது. பின் நொடிப்பொழுதில் பள்ளத்தில் இறங்கி எதிர்திசையில் இருந்த சோலார் மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் இருவரும் தலைக்கவசம் அணிந்தபோதும், கழுத்துப்பட்டையை சரியாக அணியாததால் தலைக்கவசம் வாகனம் விபத்தில் சிக்கியதும் தலையில் இருந்து பறந்து ஓடியது. மின்கம்பத்தில் இருவரும் தலைமோதி படுகாயம் அடைந்தனர். 36 முறை சதக்., சதக்.. பீர் பாட்டிலால் கணவனுக்கு நரகம் காட்டிய 17 வயது மைனர் மனைவி.. கொடூர கொலை.! 

சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்:

இந்த விபத்தில் ஹரிஷ் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனமும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்து வந்த வெலிங்டன் காவல்துறையினர் விமலை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ஹரிஷின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.