School & College Student: அதிகரிக்கும் பள்ளி & கல்லூரி மாணவிகள் மீதான வன்முறை.. ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது என்ன?.!

பெண்களை தெய்வங்களுக்கு ஈடுகொடுத்து போற்றி வரும் இந்தியாவில் தான் அவர்களுக்கு எதிரான அநீதிகளும் தலைதூக்கி நடந்து வருகிறது. தினசரி செய்திகளை வாசிக்க தொடங்கினால் பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, ஒருதலைக்காதல், பாலியல் அத்துமீறல் முயற்சி என மேற்கூறிய குற்றங்களில் ஒன்று கூட பதிவாகாமல் இருப்பதே இல்லை.

Template: Violence Against Girl

டிசம்பர், 11: பெண்களை (Girl) தெய்வங்களுக்கு ஈடுகொடுத்து போற்றி வரும் இந்தியாவில் தான் அவர்களுக்கு எதிரான அநீதிகளும் தலைதூக்கி நடந்து வருகிறது. தினசரி செய்திகளை வாசிக்க தொடங்கினால் பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, ஒருதலைக்காதல், பாலியல் அத்துமீறல் முயற்சி (Rape, Murder, Love Torture) என மேற்கூறிய குற்றங்களில் ஒன்று கூட பதிவாகாமல் இருப்பதே இல்லை. இந்திய அளவில் நாளொன்றுக்கு 60க்கும் மேற்பட்ட பாலியல் ரீதியான குற்ற நிகழ்வுகள் பெண்களுக்கு எதிராக நடப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் (India) எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் இவ்வன்முறை நடக்காமல் இல்லை. வீட்டில் பிறந்து வளர்ந்து வரும் பச்சிளம் சிறுமியான பெண் குழந்தையை, அருகிலேயே இருக்கும் உறவினர் அன்பாக பார்ப்பதாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றமும் இங்கு நடந்துள்ளது. கள்ளக்காதல் வயப்பட்ட ஒருவர் தனது கள்ளகாதலியின் மகளை தானும் அடைய நினைத்து சிறு குழந்தை முதல் இளம்பெண்கள் வரை என பலவந்தப்படுத்தி தாயின் அனுமதியுடன் பாலத்காரம் செய்த துயரமும் நடந்துள்ளது.

அதனைப்போல, பள்ளி & கல்லூரிகளுக்கு (School & College) சென்று வரும் மாணவிகள், விதவைப்பெண்களை குறிவைத்து சமூக வலைத்தளம் வழியே பழக்கத்தை ஏற்படுத்தி தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையும், அதனை விடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்த பயங்கரமும் நடந்துள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை குறிவைத்து காதல் வலைவீசி அதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கொலை செய்யும் துயரமும் நடந்துள்ளது.

Representative: Girl Feels Sad

கடந்த 4-10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த, காதலை கைவிட நினைத்த சிறுமிகள் & இளம்பெண்களின் மீது ஆசிட் வீசி (Acid Attack) கொடுமை செய்து வந்த இளைஞர்கள், இன்றளவில் திரைப்படங்களை பார்த்து கத்தி, அரிவாள் போன்றவற்றை கையில் எடுத்து பயணம் செய்கின்றனர். அதனால் நிகழ்ந்த கொலைகள் அதற்கு சாட்சியாகவும் அமைகிறது. Honey With Lemon: அச்சச்சோ.. தேன் + எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் இப்படியானவர்களுக்கு இவ்வுளவு தீங்கா?.. அதிர்ச்சியை தரும் தகவல்.! 

இவை அனைத்தும் பெண்களுக்கு அவர்களின் வீட்டின் உள்ளேயோ, பொதுவெளியிலோ நடக்கிறது. அதனை தடுக்க பெற்றோராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பது தான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் உங்களின் குழந்தைகளை அன்பு, பாசத்துடன் வளர்ந்தாலும் அவர்களின் சுய பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுத்து வளருங்கள் அல்லது அதற்கான பயிற்சி மையத்திற்கு அனுப்பி வையுங்கள்.

பெற்றோராக (Parents) நீங்கள் கூறும் வார்த்தைகளே குழந்தைகளின் மனதில் இடம்பெறும் என்பதால், எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு விஷயத்தை காண்பித்தும் பயம்கொண்டு பேசாதீர்கள். அது அவர்களின் மனதிலும் பயத்தின் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நாங்கள் இருக்கிறோம், யாராலும் உன்னை எதுவும் செய்ய இயலாது, நீ தைரியமாக பிரச்சனையை எதிர்கொள் என்ற பக்குவம் ஏற்படும் வகையில் பேசுங்கள்.

Representative: Sexual Harassment

தினமும் பள்ளிக்கு சென்று வரும்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் பயண அனுபவங்களை கேளுங்கள். குறிப்பிட்ட நபர் அவரை நாளொன்றுக்கு இரண்டு வேளையிலும் பின்தொடர்ந்து காதலை தெரிவிக்கிறேன் அல்லது வேறு மாதிரியான பிரச்சனை கொடுத்தால் தைரியமாக என்னிடம் சொல், நான் அவனது தொல்லையில் இருந்து விடுதலை பெற்று தருகிறேன் என்று கூறுங்கள். அதற்கான முயற்சியை எடுங்கள்.

இன்றுள்ள சட்டதிட்டத்தின் படி பெண்களிடம் வாலாட்டினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டால் போதுமானது. அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் அதற்கான முயற்சியை எடுங்கள். மாறாக எடுத்த எடுப்பில் நீ அவனை பார்த்தாயா? நீ பார்க்காமல் அவன் எதற்கு பார்க்கப்போகிறான்? என உங்களின் பிள்ளையை கடிந்தீர்களேயானால் அவள் எந்த தொந்தரவையும் கூறாமல் தவிர்ப்பாள், அதன் விளைவு இறுதியில் அவரின் உயிருக்கே பெரும் ஆபத்தாக அமையலாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 01:40 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement