Death Suicide (Photo Credit: Pixabay)

நவம்பர் 29, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தின் கட்டமீதி கங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லம்மா. இவரது மனைவி சாயப்பா. தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21). இவருக்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நல்லமோனி கூடத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்குப் பின் வாழ்க்கை சாதாரணமாக சென்ற நிலையில், பின்னர் கணவரின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.! 

சமையல் & கல்வித் தகுதி குறித்து குற்றச்சாட்டு:

சிரிஷாவுக்கு சமையல் பணிகளில் அனுபவம் குறைவாக உள்ளதாகவும், கல்வி தகுதி தன்னைவிட குறைவானது எனவும் கூறி சிவலிங்கம் அடிக்கடி அவளை கண்டித்தும், அவமதித்தும் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காரணத்தால் தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பின், சிவலிங்கம் சிரிஷாவை பெற்றோர் இல்லத்தில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

மன உளைச்சல் சோகத்தில் முடிந்தது:

பெற்றோர் சிரிஷாவுக்கு ஆறுதல் சொல்லி மனதை தேற்றினாலும், சில மணி நேரங்களில் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது “நீ எனக்கு தேவையில்லை” என கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த வார்த்தைகள் சிரிஷாவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டிலுள்ள அறையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

காவல்துறையினர் விசாரணை:

இந்த் சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.