IPL Auction 2025 Live

Toll Tax Hike: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவு: சுங்கச்சாவடிகளில் 5% கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல் .!

சிறந்த சாலை வடிவமைப்பு, எதிர்கால திட்டமிடல் உட்பட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது கண்காணிப்புக்கு உட்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

NHAI Logo (Photo Credit: Wikipedia Commons).jpg

ஜூன் 03, புதுடெல்லி (New Delhi): சாலைவழி பயணங்களில் விரைவு பயணத்திற்கு தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் (National Highways of India) பெரிய உதவி செய்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் வகைக்கேற்ப சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தப்படுகிறது. 6 Month Old baby Killed by Mother: உடல்நலக்குறைவால் அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரம்.. குழந்தையை கொன்று தாய் தற்கொலை.! 

5% கட்டணம் உயர்வு: முன்பு பணமாக கட்டணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், பாஸ்ட்டேக் முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நடைமுறை குறைந்து பயணங்கள் மேலும் நேரத்தை மிச்சப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய அளவில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 01ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் 5% வரை அதிகரிக்கும் என கூறியது. ஆனால், 2024 மக்களவை தேர்தலால் அது தள்ளிப்போனது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் 5% கட்டண உயர்வு என்பது இன்று அதிகாலை 12:00 மணிமுதல் அமலுக்கு வந்துள்ளது. மொத்தமாக இந்திய அளவில் 855 கட்டண சுங்கச்சாவடிகள் செயலில் இருக்கின்றன.