IND Vs SA 2nd Test: 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை துவம்சம் செய்த தென்னாபிரிக்கா.. இந்தியா Vs தென்னாபிரிக்கா போட்டியில் திரில் சம்பவம்.!
India Vs South Africa Test: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதிய டெஸ்ட் தொடரை, தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
நவம்பர் 26, கவுகாத்தி (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20ஐ போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் அசாம் மாநிலத்தின் கவுகாத்தி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வந்தது. இந்த போட்டியிலும் தென்னாபிரிக்க அணி அசத்தல் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. IND vs SA 1st Test: தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி.. 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.!
இந்தியா எதிர் தென்னாபிரிக்கா (IND Vs SA Test):
ந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாபிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதிய டெஸ்ட் தொடரில், முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 151.1 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 489 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 83.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே சேகரித்தது. இரண்டாவது இன்னிங்சில் தென்னாபிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களை 78.3 ஓவரில் சேகரித்தது. அதிக ரன்கள் வித்தியாசம் என்ற நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் போராடி 63.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாபிரிக்க அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
(The above story first appeared on LatestLY on Nov 26, 2025 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

