LPG Cylinder Price: மாதத்தின் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை.. விலை உயர்வு.!

அக்டோபர் மாதத்துக்கான கியாஸ் சிலிண்டர் விலை (October 2025 Gas Cylinder Price in Chennai) உயர்ந்துள்ளது. வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு சமையல் எரிவாயுக்கான விலை மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது.

Gas Cylinder (Photo Credit: @ANI X)

அக்டோபர் 01, சென்னை (Chennai News): ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் உற்பத்தி & சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. கச்சா எண்ணெய் கிடைக்கும் அளவு, அதன் தேவை, உலகளாவிய பயன்பாடு மற்றும் சந்தை மதிப்பு, இதர செலவினங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாதத்தின் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலை (LPG Gas Cylinder Price October 2025) நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. Saraswati Puja 2025: சரஸ்வதி தேவியின் பூரண அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்.! 

சமையல் எரிவாயு விலை இன்று:

அந்த வகையில், மத்திய அரசின் தலையீடு காரணமாக வீட்டு உபயோகத்துக்கான 14 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு விலை இதுவரை மாற்றம் செய்யப்படாமல் ரூ.868.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ஏற்ற இறக்கத்துடன் ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் இருக்கின்றன. அந்த வகையில், செப்டம்பர் மாதம் சமையல் எரிவாயு விலை சென்னையில் ரூ.16 உயர்ந்து ரூ.1,754க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement