Delhi Winter Death: நடுநடுங்க வைத்த குளிர்.. 56 நாட்களில் 474 பேர் மரணம்.. டெல்லியில் அதிர்ச்சி.. ஷாக் ரிப்போர்ட்.!

டெல்லியில் குளிர்கால பாதிப்பால் வீடற்ற 474 பேர் உயிரிழந்துள்ளனர்.

Dead Body (Photo Credit: Pixabay)

ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): முழுமையான வளர்ச்சிக்கான மையம் (CHD) தன்னார்வத் தொண்டு நிறுவனமான அளித்த தகவலின்படி, டெல்லியில் இந்த குளிர்காலத்தில், அதாவது 56 நாட்களுக்குள் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை ஆரம்பித்துள்ளது. சாலையோரம் தங்கியவர்களுக்கு கம்பளி போர்வைகள், சூடான தண்ணீர், மறைக்கப்பட்ட தங்குமிடங்கள் இல்லாததால் இந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Woman Sexual Assault: வீட்டில் அத்துமீறி புகுந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. ஆசிட் ஊற்றி கொடூர செயல்..!

குளிரால் 474 பேர் உயிரிழப்பு (Delhi Winter Death 2025):

டெல்லியில் இந்த உயிரிழப்புகள் 2024 டிசம்பர் 15 முதல் 2025 ஜனவரி 10 வரை நிகழ்ந்துள்ளன. இந்த செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள், உண்மையாக இருந்தால், இது கடுமையான மனித உரிமை மீறலாக இருக்கும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டெல்லி காவல் துறை ஆணையருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement