Woman Sexual Assault: வீட்டில் அத்துமீறி புகுந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. ஆசிட் ஊற்றி கொடூர செயல்..!
அசாமில் வீட்டில் அத்துமீறி நுழைந்து குழந்தைகள் முன்னிலையில் பெண்ணை பாலியல் வன்கொமை செய்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 31, கச்சார் (Assam News): அசாம் மாநிலம், கச்சார் (Cachar) மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் தேதி பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், பக்கத்து வீட்டுக்காரரான சாரதி (வயது 28) என்பவர், வீட்டிற்கு அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு, அந்த பெண்ணை அவரது குழந்தைகள் முன்னிலையில் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். மேலும், அந்த பெண் மீது ஆசிட் வீசி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, வீடு திரும்பிய கணவர், மனைவியின் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். Viral Video: லாரி ஓட்டுனரின் சாதுர்ய செயலால் தப்பிய உயிர்.. நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்..!
பெண் பாலியல் வன்கொடுமை:
உடனே, தனது மனைவியை மீட்டு சில்சார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெண்ணின் கணவர் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளி சாரதியை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

