Teenager Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டம் உயிர் பறித்த சோகம்.. லட்சங்களை இழந்ததால் விபரீதம்..!

தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்த விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Dies By Suicide (Photo Credit: @bigtvtelugu X)

ஜனவரி 03, கம்மம் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கம்மம் (Khammam) மாவட்டத்தில் உள்ள கொல்லப்பள்ளி அருகே கொரட்லாவைச் சேர்ந்தவர் உபேந்தர். இவர், கம்மம் சந்தையில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து கிராமங்களில் விற்பனை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு (Online Gambling) அடிமையான உபேந்தர், போதை பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். PUBG Addiction: பப்ஜி கேமில் மூழ்கிய 3 வாலிபர்கள்.. ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பலி..!

வாலிபர் தற்கொலை:

இதனால், அதிக வட்டிக்கு சுமார் ரூ. 6 லட்சம் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அவற்றை திருப்பிச் செலுத்த முடியாததால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now