Death | Railway Track (Photo Credit: Pixabay)

ஜனவரி 03, பாட்னா (Bihar News): பீகார் மாநிலம், மேற்கு சம்பாரண் (West Champaran) மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 02) செல்போனில் பப்ஜி கேம் (PUBG) விளையாடிக் கொண்டிருந்த 3 வாலிபர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். முஃபாசில் காவல்நிலையத்திற்குட்பட்ட நர்கதியாகஞ்ச்-முசாபர்பூர் ரயில் தண்டவாளத்தில் மன்சா தோலாவில் உள்ள ராயல் பள்ளி அருகே விபத்து ஏற்பட்டது. ரயில் தண்டவாளத்தில் இருந்து கேம் விளையாடிக் கொண்டிருந்த அவர்கள், இயர்போன் அணிந்திருந்ததால், ரயில் வருவதை கவனிக்கத் தவறியதால் விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். PM Narendra Modi: வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாள்; வீரத்தை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி.!

3 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி:

இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பலியானவர்கள் ரயில்வே கும்டியில் வசிக்கும் ஃபுர்கான் ஆலம், சமீர் ஆலம் மற்றும் ஹபிபுல்லா அன்சாரி என அடையாளம் காணப்பட்டனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மொபைலில் கேம் விளையாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பற்ற சூழலில் குறிப்பாக ரயில் பாதைகளில் மொபைல் கேம்களை விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குழந்தைகளின் கேமிங் பழக்கத்தை பெற்றோர்கள் கண்காணித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்களைத் தடுக்க பொது இடங்களில் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகாரிகள் வலியுறுத்தினர்.