சாலை விபத்தில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

மே 06, டெல்லி (Delhi News): இந்தியாவில் நிகழும் சாலை விபத்து (Road Accident) தொடர்பான வழக்கில், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் சில கருத்துகளை கூறி இருந்தது. கடந்த சில மாதங்கள் முன்பு கட்டணமில்லா சிகிச்சை திட்டம், நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். War Mock Drill: நாளை போர்க்கால ஒத்திகை; தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் நடைபெறும்? முழு விவரம் இதோ..!

இலவச சிகிச்சை:

இந்நிலையில், நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இலவச சிகிச்சை திட்ட செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர் மட்டக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த நாள் முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 2030க்குள் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement