War Mock Drill: நாளை போர்க்கால ஒத்திகை; தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் நடைபெறும்? முழு விவரம் இதோ..!
தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறவுள்ளது.
மே 06, சென்னை (Chennai News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இது, தற்போது இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகையை நாளை (மே 07) நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பச்சைக்கொடி காட்டிய ரஷ்யா.. உச்சகட்டமாகும் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை..!
போர்க்கால ஒத்திகை:
இந்நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை (War Drill) நடத்தப்படுகிறது. அதன்படி கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. போர் பதற்ற சூழலின்போது, மக்களை எப்படி பாதுகாப்பது, மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும். இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு நடந்துள்ளது. அதன் பிறகு, 54 ஆண்டுகள் கழித்து, இந்தியாவில் நாளை (மே 07) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on May 06, 2025 02:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

