UPSC Result 2024: யுபிஎஸ்சி 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு; பெண் முதலிடம் பிடித்து சாதனை..!

2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள், தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Shakti Dubey Tops UPSC Civil Services Exam 2024 (Photo Credit: @iamkunwarji X)

ஏப்ரல் 22, சென்னை (Chennai News): மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (UPSC Exam 2024) சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் மற்றும் மத்திய அரசு குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கு 1,056 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டமாக நடத்தப்பட்டது. 10 வயது மேற்பட்ட சிறார்களும் வங்கிக்கணக்கு தொடங்கலாம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விபரம் இதோ..!

பெண் முதலிடம்:

தற்போது, இறுதி முடிவுகள் வெளியான நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே (Shakti Dubey) என்ற பெண் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். ஹர்ஷிதா கோயல் 2வது இடத்தையும், டோங்ரே அர்ச்சித் பராக் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். யுபிஎஸ்சி-யின் https://upsconline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள், தரவரிசை பட்டியலை காணலாம்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement