Man Stabbed To Death: தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபர்; பலமுறை எச்சரித்தும் நீடித்த உறவு.., ஆத்திரத்தில் மகன்கள் வெறிச்செயல்..!

குஜராத்தில் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை, இரண்டு சகோதரர்கள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Man Stabbed To Death: தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபர்; பலமுறை எச்சரித்தும் நீடித்த உறவு.., ஆத்திரத்தில் மகன்கள் வெறிச்செயல்..!
Knife (Photo Credit: Pixabay)

ஜனவரி 30, காந்திநகர் (Gujarat News): குஜராத் மாநிலம், காந்திநகரைச் (Gandhinagar) சேர்ந்தவர் சஞ்சய் (வயது 27). இவரது சகோதரர் ஜெயேஷ் தாக்கூர் (வயது 23). இவர்களது தந்தை, கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால், இவர்கள் இருவரும் தனது தாயுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சகோதரர்களின் தாய், ரத்தன்ஜி தாக்கூர் (வயது 45) என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், மகன்கள் இருவருக்கும் தெரியவந்துள்ளது. Young Girl Sexual Assault: வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. அசாம் வாலிபர் கைது..!

கொடூர கொலை:

இதன்காரணமாக இரண்டு பேரும் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். அதன்படி, அவர்கள் இருவரும் தங்கள் தாயிடமிருந்து விலகி செல்லுமாறு, அவரை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அந்த உறவு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சஞ்சய் மற்றும் ஜெயேஷ் ஆகியோர் கத்தி மற்றும் தடியுடன் சென்று ரத்தன்ஜியின் வயிற்றில் (Murder) குத்தினர். இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 2 சகோதரர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



தொடர்புடைய செய்திகள்

IML T20 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025: கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உங்களின் நாயகர்கள் மீண்டும் களத்தில்.. நாளைய போட்டி விபரம்.. முழு தகவல் இதோ.!

RCB Vs MI Highlights: பெங்களூரை சொந்த மண்ணில் கதறவிட்ட மும்பை.. திரில் வெற்றி.. பெங்களூர் முதல் தோல்வி.!

RCB Vs MI: மரண காட்டு காண்பித்த எலிசி, ஸ்மிருதி, ரிச்சா.. மிரண்ட பெங்களூர்.. மும்பை வெற்றிக்கு 168 ரன்கள் இலக்கு.!

AFG Vs SA Highlights: ஆப்கானிஸ்தானை பொளந்துகட்டிய தென்னாபிரிக்கா.. திணறத்திணற வெளுத்து வாங்கிய சம்பவம்.. மாஸ் வெற்றி.!

Share Us