Young Girl Sexual Assault: வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. அசாம் வாலிபர் கைது..!

கர்நாடகாவில் வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Young Girl Sexual Assault: வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. அசாம் வாலிபர் கைது..!
Sexual Abuse | Rape File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 30, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், ராமநகர் (Ramanagara) பகுதியில் உள்ள பிடதியில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மஞ்சூர் ஆலம் (வயது 26). இவர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 28) மாலை, இளம்பெண் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றார். Human Sacrifice: நோய் குணமாக மனைவி நரபலி; கணவருக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!

இளம்பெண் பலாத்காரம்:

இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, இளம்பெண்ணை பலவந்தமாக தன் வீட்டுக்கு இழுத்து வந்து, பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இவர்களை கண்டதும் தப்பியோட முயன்றபோது, விரட்டி பிடித்தனர். மேலும், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு உடனடியாக அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பிடதி காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

 

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).