Road Accident: தடுப்புச் சுவரில் பைக் மோதி இருவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!

ஐதராபாத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bike Accident in Hyderabad (Photo Credit: @ChotaNewsTelugu X)

டிசம்பர் 27, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் (Hyderabad) உள்ள மாதப்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஐயப்பா சொசைட்டியில், வேகமாகச் சென்றபோது பைக் கட்டுப்பாட்டை (Bike Accident) இழந்து விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து இருவர் தூக்கி வீசப்பட்டனர். அதிவேகமாக வந்த பைக்கில் இருந்து ஓட்டுநரும், மற்றொரு பயணியும் தூக்கி வீசப்பட்டனர். வேகமாக வந்த பைக் டிவைடரில் மோதி கீழே விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். PhD Student Dies By Suicide: தந்தை வாங்கிய பணத்திற்காக மகளை துன்புறுத்திய காவல் அதிகாரி.. வீடியோ எடுத்து மாணவி தற்கொலை..!

இருவர் பலி:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர்கள் போராபண்டாவைச் சேர்ந்த ரகு பாபு மற்றும் ஆகான்ஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில் இருவரும் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

வீடியோ இதோ:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement