PhD Student Dies By Suicide (Photo Credit: @TeluguScribe X)

டிசம்பர் 27, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் (Hyderabad) உள்ள நாச்சரம் சரஸ்வதி நகர் காலனியைச் சேர்ந்த புலிவர்த்தி சங்கீத் ராவ் என்பவரது மகள் தீப்தி (வயது 29). இவர், ஐஐசிடியில் பிஎச்டி (PhD in IICT) படித்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு, இவர்களது வீட்டின் எதிரே இருந்த காவலர் அனில் என்பவர், தனது மனைவிக்கு ஐஐசிடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி சங்கீத் ராவ் ரூ.15 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக நாச்சரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். Husband Kills Wife: குடிபோதையில் தகராறு; மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவர் கைது..!

பணம் கேட்டு மிரட்டல்:

இதனால், தீப்தியின் குடும்பத்தினர் அனிலிடம் ரூ.8 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். இருப்பினும், அவர் மகள் தீப்தியை காவல்நிலையத்திற்கு அழைத்து, பணத்திற்காக பொய் வழக்குகள் போட்டதாக சங்கீத் ராவ் குற்றம் சாட்டினார். மேலும், வழக்கை வாபஸ் பெற அனிலின் மாமா சோமையா, மனைவி அனிதா, அனிதாவின் சகோதரர் சைதுலு தீப்தி ஆகியோர் ரூ.35 லட்சம் கேட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்பா பணத்தை எடுத்துக்கொண்டார் என்றும், மேலும் பல வருடங்களாக அவர்களுடன் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மாணவி தற்கொலை:

ஆனால்,  அனில் மேலும் பலமுறை தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்து வழக்குப்பதிவு செய்து மிரட்டி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து, தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதில் காவல்துறையின் துன்புறுத்தல் தான் இப்படி ஒரு கடினமான முடிவை எடுக்க காரணம் என்று சொல்லிவிட்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முன் அவர் பேசிய வீடியோ:

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.