Chicken Heat Stress: கோடையில் கோழிகளுக்கு வெப்ப பாதிப்பு.. பாதுகாக்க சில வழிமுறைகள்!

பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் வெப்பத்தால் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை காணலாம்.

Chicken (Photo Credit: YouTube)

பிப்ரவரி 25, சென்னை (Chennai News): கோடையில் அதிக வெப்பத்தினால் கோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், கோழி பண்ணை உரிமையாளர்களும் கோழிகள் வெப்பத்தால் பாதிக்கப்படுவதற்கு முன்கூட்டியே கண்டறியந்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோழிகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய சில அறிகுறிகள்:

  • கோடைகாலத்தில் கோழிகள் உடலில் வெப்பனிலை அதிகரித்து முச்சு விட சிரமப்படும்.
  • கோழிகள், அவைகளின் அலகுகளை அடிக்கடி திறந்து மூடிக்கொண்டு இருக்கும்.
  • இயல்பான அளவை விட அதிக அளவு தண்ணீர் குடிக்கும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால் கோழிகள், தீவனம் குறைந்த அளவு எடுத்து கொண்டு அதிகமாக தண்ணீர் அருந்தும்.
  • மேலும் கோழிகளின் எடையும் வளர்ச்சியும் குறையும். வெப்பத்தால் சோர்வாகவே காணப்படும்.
  • முட்டை ஓட்டின் தரமும் குறையும். லேசான ஓடுடைய முட்டையை இடும்.
  • கோழிகளின் உடலில் வெப்பம் அதிகரித்தால் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்ளும். இயல்புக்கு மாறாக மண்ணுக்குள் உடலைப் புதைத்துக் கொள்ளும்.
  • வெப்பத்தால் பாதிப்படைந்தால் இதயத்துடிப்பு அதிகரித்து, வேகமாக பெருமூச்சு விடும். மூளைக்கு செல்லும் இரத்தம் ஓட்டமும் அதிகரிக்கும்.
  • ஏதேனும் கோழி வெப்பத்தால் பாதிப்படைந்ததாக தெரியவந்தால் அதை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும். Banana Kesari Recipe: சுவையான வாழைப்பழ கேசரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

இவைகளைத் தடுக்க:

  • அடிக்கடி கோழிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

    காலையும் மாலையும் கோழிகளுக்கு தேவையான சத்துள்ள தீவனத்தை அளிக்க வேண்டும். அதிக வெய்யிலில் தீவனம் அளிக்க கூடாது.

  • கோழிகளுக்கு அடிக்கடி குடிக்க தண்ணீர் வைக்க வேண்டும்.

    கோடையில் கோழிகளுக்கு அதிக காற்றோட்டத்துடன் இட வசதியளிக்க வேண்டும். நாட்டுகோழிகளுக்கு மர நிழலில் கூண்டுகளை அமைக்கலாம்.

  • கோழிகள் இருக்கும் பகுதிகளில் அல்லது நிழலான இடங்களில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து குளுமையாக வைக்க வேண்டும்.

    குடிநீரில் வைட்டமின் சி அல்லது பி காம்பிளக்ஸ் மருந்துகளை அளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கலாம். மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையில் வழங்கவும்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement