
பிப்ரவரி 24, சென்னை (Kitchen Tips): வாழைப்பழங்கள் அதிகம் பழுத்து விட்டால் இவ்வாறு ஸ்வீட் செய்து சாப்பிடலாம். எல்லா பொருள்களும் கைவசம் இருக்கக்கூடியவைதான்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம்-2
சர்க்கரை-1கப்
ரவை-1/2 கப்
முந்திரி-5
உலர்ந்த திராட்சை-5
குங்குமப்பூ- 2 சிட்டிகை
நெய்- தேவையான அளவு Banana Appam Recipe: சுவையான இனி்ப்பு அப்பம் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
முதலில் அடுப்பில் பேனை வைத்து அதில் 4 தேக்கரண்டி நெய் ஊற்றி 5 முந்திரி, 5 உலர்ந்த திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இப்போது அதே நெய்யில் ½ கப் ரவையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பேனில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி மசித்த 2 வாழைப்பழத்தை நன்றாக வதக்கவும், 3 ½ கப் தண்ணீரை அதில் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இப்போது அதில் வறுத்து வைத்திருக்கும் ரவையை சேர்த்து நன்றாக வேகவிடவும். சூடான பாலில் 2 சிட்டிகை குங்குமப்பூவை கலந்து வைத்து பிறகு இதில் சேர்த்துக் கொண்டு, இத்துடன் 1 கப் சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதில் 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிண்டி இறக்கவும். அவ்வளவுதான், சுவையான வாழைப்பழ கேசரி தயார்.