Kambu Laddu Recipe: உடலுக்கு வலுசேர்க்கும் கம்பு லட்டு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கம்பு லட்டு எப்படி செய்து சாப்பிடுவது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

Kambu Laddu (Photo Credit: YouTube)

மே 08, சென்னை (Kitchen Tips): நம் உடலுக்கு தேவையான அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் கம்பில் (Pearl millet) நிறைந்து காணப்படுகிறது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில், ஆரோக்கியமான சத்தான கம்பு லட்டு எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 3 கப்

வெல்லம் - 3 கப்

நெய் - தேவையான அளவு

ஏலக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை. Google Pixel 8a: அதிரடி ஆஃபருடன் களமிறங்கும் கூகுள் பிக்சல் 8a..! முழு விவரம் உள்ளே..!

செய்முறை:

முதலில் கம்பு மாவை (Kambu Laddu) ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர், உருண்டையாக இந்த மாவை பிடித்து, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பிடித்து வைத்த கம்பு மாவை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து நன்கு மாவாக அரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, போன்றவைகளை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின், இதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அடுத்து, கடாயில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும். இதில் அரைத்து வைத்த கம்பு மாவு மற்றும் பொடித்து வைத்தவைகள் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறிவிடவும். கடாயில் அடி பிடிக்காதவாறு நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியாகி வந்தவுடன், கையில் சூடு பொறுக்கும் வரை சிறு லட்டுகளாக பிடித்து வைக்கவும். அவ்வளவுதான் சுவையான கம்பு லட்டு ரெடி.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement