மே 08, சென்னை (Technology News): கூகுள் நிறுவனம் தற்போது கூகுள் பிக்சல் 8a (Google Pixel 8a Smart Phone) ஸ்மார்ட்போனை அசத்தலான ஆஃபருடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிக்சல் சீரிஸ் மாடலான கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை, இந்தாண்டு கூகுள் அறிமுக விழா வருகின்ற மே 14-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இதில் பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனின் முன்பதிவு, பிளிப்கார்ட்டில் தொடங்கியுள்ள நிலையில், முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிக்சல் பட்ஸ் ஏ சீரிஸ் இயர்போன்களை வெறும் ரூ.999-க்கு வாங்கலாம். பிக்சல் 8a ஸ்மார்ட் போனின் விற்பனை வருகின்ற மே 14-ஆம் தேதி அன்று காலை 6.30 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்படவுள்ளது. Collapsing Barrier Accident: தடுப்புசுவர் இடிந்து விழுந்து விபத்து; 4 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு..!

விலை: இதில், 128ஜிபி வெர்ஷன் ரூ.52,999-க்கும், 256ஜிபி கொண்ட போன் ரூ.59,999-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், அறிமுக சலுகையாக எஸ்.பி.ஐ வங்கி கார்டுக்கு ரூ.4000 தள்ளுபடி அளித்து, பழைய போன்களை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.9000 வரை பணம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ரூ.52,999 மதிப்புள்ள கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை, ரூ.39,999-க்கு வாங்க முடியும்.

சிறப்பம்சங்கள்: இதில், 6.1 இன்ச் ஸ்கிரீன் மற்றும் OLED Actua டிஸ்பிளே, 4492 mAh பேட்டரி திறன் மற்றும் கூகுளின் Tensor G3 சிப்செட் ஆகிய அம்சங்களுடன் உள்ளது. டூயல் ரியர் கேமரா வசதியுடன், 64MP மெயின் லென்ஸும், 13MP அல்ட்ரா வைடு லென்ஸும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி கேமரா 13MP இதில் உள்ளது. மேலும் Aloe, Bay, Obsidian, மற்றும் Porcelain ஆகிய நான்கு விருப்ப வண்ணங்களில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இதில் AI வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.