Mysore Pak Recipe: வீட்டிலேயே சுவையாக மைசூர் பாக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
பேக்கரி சுவையில் மைசூர் பாக் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
நவம்பர் 18, சென்னை (Kitchen Tips): கடலை மாவு மற்றும் உருகிய நெய் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் மைசூர் பாக் ஆகும். இந்த பேக்கரி ஸ்டைல் மைசூர் பாக் (Mysore Pak) ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இதனை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 4 கப். Crab Soup Recipe: காரசாரமான நண்டு சூப் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் ஒரு சதுரமான தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும். பிறகு கடலை மாவை நன்றாக சலித்து, ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, சர்க்கரையை போட்டு கொதிக்கவிட்டு, நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
- பின், ஒரு கையால் கிளறிக் கொண்டே மற்றொரு கையால் கடலைமாவை கொஞ்ச கொஞ்சமாகப் போட்டு கிளறிவிடவும். இல்லையெனில், கடலைமாவு கட்டி பிடித்து விடும்.
- கடலை மாவு சர்க்கரைப்பாகில் நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், நெய்யை சிறிது சிறிதாக விட்டு, மறுபுறம் விடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- சிறிது நேரத்தில் பாகு அடியிலிருந்து நுரைத்துக் கொண்டு வரும். மேலும், நன்றாக கிளறி விட்டு, நெய் தடவி வைத்த தட்டில் கொட்டவும்.
- பின்னர், சிறிது நேரம் ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன், நெய் தடவிய கத்தியால் சதுரமாகவோ, அல்லது செவ்வகமாகவோ துண்டுகள் போடவும். அவ்வளவுதான் சுவையான மைசூர் பாக் ரெடி.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
Advertisement
Advertisement
Advertisement