நவம்பர் 16, சென்னை (Kitchen Tips): மழைக்காலங்களில் பெரும்பாலான நபர்களுக்கு சளி, இருமல் வந்துவிடும். இதனை சரிசெய்ய நாம் பல்வேறு சூப் ரெசிபிகளை செய்து பருகுவோம். அந்த வகையில், மழைக்காலங்களில் நண்டு (Crab) சூப் வைத்து, மிளகு சேர்த்து சாப்பிடும்போது, சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. முடிந்த அளவு வயல் நண்டு சூப் உடலுக்கு நல்ல பயனை அளிக்கும். கடல் மீன் உணவுகளில் சுவையான வகைகளில் நண்டு மிகவும் முக்கியமானது. கணுக் காலிகள் எனச் சொல்லப்படும் நண்டுகள், சிப்பி இனத்தைச் சேர்ந்தவை. நண்டுகளில் பல வகை உண்டு. பால் நண்டு, வலை நண்டு, வயல் நண்டு, டஞ்சன் நண்டு, நீல நிற நண்டு, சிவப்பு நிற நண்டு என உள்ளன. இவற்றைப் பல சுவைகளில் சமைக்கலாம். அந்தவகையில் வயல் நண்டு சூப் (Nandu Soup) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Pudalangai Bajji Recipe: சுவையான புடலங்காய் பஜ்ஜி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
நண்டு - 150 கிராம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
இலவங்கப்பட்டை - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி, வெங்காயம் - தலா 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் நண்டு எடுத்துக் கொண்டு அதனை சுத்தம் செய்து கால் பகுதியை தனியாக எடுத்து நன்கு நொறுக்கவும்.
- பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு இடித்தது, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
- பின்னர் நொறுக்கப்பட்ட நண்டுவை சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
- அடுத்து, கொத்தமல்லி இலைகள் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, தண்ணீர் ஓரளவிற்கு சுண்டிய பிறகு மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு அதனை வடிக்கட்டவும். அவ்வளவுதான் காரசாரமான நண்டு சூப் ரெடி.