Urulai Kilangu Kara Kari: உருளைக்கிழங்கு கார கறி செய்வது எப்படி? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

வீட்டில் சுவையாக உருளைக்கிழங்கு கார கறி எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.

Potato Kara Curry Recipe (Photo Credit: YouTube)

ஜனவரி 18, சென்னை (Kitchen Tips): உருளைக்கிழங்கு வைத்து எப்போதும் போல பொரியல் செய்யாமல், சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை (Potato) வைத்து சுவையான கார கறி செய்யலாம். இதனை குழந்தைகள் வெறுமனே கிண்ணத்தில் போட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு மிகவும் ருசியாக இருக்கும். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கு கார கறி (Urulai Kilangu Kara Kari) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Brinjal Fry Recipe: கத்திரிக்காய் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 2 சிட்டிகை

காஷ்மீரி மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 10 பல்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி 5 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு, அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு 3-4 நிமிடம் குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
  • பிறகு, அதில் 10 பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அதனுடன் 1 கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு கார கறி (Potato Kara Curry) தயார்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement