ஜனவரி 17, சென்னை (Kitchen Tips): பெரும்பாலும் கிராமத்து ஸ்டைல் உணவுகளில் கத்திரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்தவகையில், கத்திரிக்காய் வைத்து சுவையான கத்திரிக்காய் வறுவல் (Kathirikai Varuval) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். காரசாரமான மசாலாக்கள் நிறைந்த இந்த வருவல், சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். Chicken Biryani Recipe: அசத்தலான சுவையில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் - 8
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 கரண்டி
மஞ்சள் தூள் - கால் கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மசாலா பொடிக்கு தேவையானவை:
தேங்காய் - கால் கப்
கடலைப் பருப்பு - 3 கரண்டி
எள் - 2 கரண்டி
தனியா - 1 கரண்டி
மிளகு - அரை கரண்டி
வேர்க்கடலை - 1 கரண்டி
சீரகம் - அரை கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
புளி - சிறிதளவு
செய்முறை:
- முதலில் கத்திரிக்காயை நன்கு கழுவி நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், தேங்காயை துருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸியில் கடலைப்பருப்பு, வேர்க்கடலை, மிளகு, தனியா, சீரகம், எள், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அடுத்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர், கத்திரிக்காயை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் தூவி நன்றாக வதக்கி, கத்தரிக்காய் வெந்த பிறகு மசாலா பொடி அதில் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். மொறுமொறுவென வரும் வரை வதக்கினால், சுவையான கத்திரிக்காய் வறுவல் ரெடி.