Ragi Paal Kolukkattai Recipe: சுவையான ராகி பால் கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
வீட்டிலேயே சுவையான ராகி பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் காண்போம்.
பிப்ரவரி 06, சென்னை (Kitchen Tips): இனிப்பு பிரியர்களுக்காக பலவிதமான ரெசிபிகள் உள்ளன. அந்தவகையில், வீட்டிலேயே சுவையான ராகி பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Coconut Halwa Recipe: தேங்காய் அல்வா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 2 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
உப்பு - சிறிதளவு
செய்முறை:
- முதலில் பவுலில் ராகி மாவு 2 கப் எடுத்துக் கொள்ளவும். அதில், உப்பு சேர்த்து கலந்துவிட்ட பிறகு சுடு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது அடுப்பில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்த பின், அதில் மாவை சிறிது சிறிதாக பால் போன்று உருட்டி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். இதில், ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து, வெல்லம் 1 கப் சேர்த்து நன்றாக கரையும் வரை விடவும்.
- தேங்காய் 1 கப் எடுத்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, பாலை எடுத்து கொழுக்கட்டையில் கலந்துவிடவும். இறுதியாக, துருவிய தேங்காய் 1 கைப்பிடி தூவி இறக்கினால் சுவையான ராகி பால் கொழுக்கட்டை ரெடி.
Tags
Today News
Live News Tamil
Today News in Tamil
News Today
News
Live News
இன்றைய செய்திகள்
Kitchen Tips
Cooking Tips
Ragi Paal Kolukkattai Recipe
Ragi Paal Kolukkattai
Paal Kolukkattai
Ragi Kolukkattai Recipe
Ragi Kolukkattai
Ragi Recipe
Kolukkattai Recipes
சமையல் குறிப்புகள்
ராகி பால் கொழுக்கட்டை
கொழுக்கட்டை ரெசிபி
பால் கொழுக்கட்டை
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
Advertisement
Advertisement
Advertisement