![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/coconut-halwa-recipe.jpg?width=380&height=214)
பிப்ரவரி 05, சென்னை (Kitchen Tips): இனிப்புகள் என்றாலே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு என்றால் அது அல்வாதான். அல்வா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான். ஆனால், அல்வாவில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அந்தவகையில், தேங்காய் அல்வாவை (Coconut Halwa) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம். Javvarisi Payasam Recipe: அட்டகாசமான சுவையில் ஜவ்வரிசி பாயசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பெரிய தேங்காய் - 1
பச்சரிசி - 1 கப்
ஏலக்காய் - 4
முந்திரிப் பருப்பு - 20
தூளாக்கப்பட்ட வெல்லம் - 1 கப்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் தேங்காயை உடைத்து உதிரியாக துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து, ஏலக்காயை தோல் நீக்கி வைக்கவும் அல்லது பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். பின்னர், நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயையும், அரிசியையும் மிக்ஸியில் அரைத்து நன்றாக வெண்ணை போல விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கனமான பாத்திரத்தில் மிக்ஸியில் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பில் வைத்து உடன் வெல்லத் தூளையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக கிளறி விடவும்.
- இந்த கலவை அனைத்தும் சுருள வரும் வரையில் பொறுமையாக நன்றாகக் கிளறவும். இப்போது, நன்கு சுருள வந்தவுடன் நெய்யை ஊற்றி, வறுத்த முந்திரியையும் போட்டு நன்றாக கிளறி விட்டு இறக்கி வைக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் அல்வா ரெடி.