Garlic Chutney: இட்லி-தோசைக்கு ஏற்ற சுவையான பூண்டு சட்னி.. செய்வது எப்படி?

உடலுக்கு பல நன்மைகளை தரும் பூண்டு சட்னி வடிவிலும் சாப்பிடலாம். பூண்டு வேண்டாம் என ஒதுக்கும் குழந்தைகளும், இட்டிலி-தோசைக்கு ஏற்ற சுவையான சட்னியை வைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Garlic Chutney (Photo Credit: YouTube)

ஏப்ரல் 21, சென்னை (Cooking Tips Tamil): காலை மற்றும் இரவு நேரங்களில் பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை போன்றவை அதிகம் பரிமாறப்படும். இவைக்கு தொடுக்கறியாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, மல்லி சட்னி என அவரவர் வீட்டுக்கு ஏற்ப தயாரித்து வழங்குவார்கள். இன்று ஒரு மாறுதலுக்கு சுவையான பூண்டு சட்னியை செய்து பாருங்கள். காரசாரமான பூண்டு சட்னி குழந்தைகள் முதல் அனைவராலும் விரும்பப்படும். பூண்டு தனியாக சாப்பிட விரும்பாதவர்களும் பூண்டு சட்னியை ருசித்து சாப்பிடுவார்கள். Summer Tips: சுட்டெரிக்கும் வெயில்.. சூடேறும் மீட்டர்.. மின்கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம்? 

தேவையான பொருட்கள்:

பூண்டு - 200 கிராம்,

காய்ந்த மிளகாய் - 7,

சிறிய வெங்காயம் - 15,

புளி - சிறிதளவு,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

எண்ணெய் & உப்பு - தேவையான அளவு,

கடுகு & உளுந்து - சிறிதளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட வானெலியில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், உரித்த பூண்டு, புளி சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அதே வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான பூண்டு சட்னி தயார். இதனை இட்லி, முட்டை தோசை, சப்பாத்தி, கோதுமை தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். விருப்பம் இருப்பவர்கள் சூடான சாதத்திலும் சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement