Tasty Meen Kulambu Recipe: சுவையான மீன் குழம்பு.. கைப்பக்குவத்து தங்கம் தான் வாங்கி போடுவாங்க..!

மீன் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற பல சுவையான ரெசிபிக்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடருங்கள்.

Fish Curry (Photo Credit: @LKGPONNU X)

மே 03, சென்னை (Cooking Tips Tamil): ஊரே மனமனக்க மீன்குழம்பு வைத்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறி, இன்றளவில் பிரியாணி அதன் இடத்தை பிடித்துவிட்டது. பிரியாணியும் சைவம், சிக்கன், மட்டன், மீன் என பல வகைகளும் வந்துவிட்டது. சுடச்சுட உள்ள சோறில் மீன் குழம்பை ஊற்றி சாப்பிடும்போது கிடைக்கும் ருசியே தனி என்று கூறலாம். இன்று சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். Body Heat Reduction Tips: கொளுத்தும் வெயில்.. உடல் சூட்டை தணிக்க என்ன செய்ய வேண்டும்? அசத்தல் டிப்ஸ் இதோ..! 

தேவையான பொருட்கள்:

மீன்

வரமல்லி - 1 கரண்டி,

மிளகு - 1 கரண்டி,

சீரகம் - 1 கரண்டி,

வெந்தயம் - 1/2 கரண்டி,

காய்ந்த மிளகாய் - 2,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

தேங்காய் துருவல் - 1 கப்,

மஞ்சள் தூள், மிளகாய் தூள் - தேவையான அளவு,

பூண்டு - 5 பற்கள்,

உப்பு - தேவையான அளவு,

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,

எண்ணெய் - தேவையான அளவு,

கடுகு-உளுந்து - சிறிதளவு,

பச்சை மிளகாய் - 1,

தக்காளி - 3,

சின்ன வெங்காயம் - 200 கிராம்.

செய்முறை:

⊕ மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை முதலில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

⊕ பின் இதனை மிக்சியில் சேர்த்து அரைக்கும்போது பூண்டு, உப்பு, புளித்தண்ணீர், மிளகாய் & மஞ்சள் தூள் சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

⊕ பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

⊕ இவை வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.

⊕ மீன் குழம்பு பக்குவத்துக்கு கொதி வந்ததும் மிதமான தீயை வைத்து மீனை சேர்க்கவும்.

⊕ 8 முதல் 10 நிமிடத்தில் மீன் வெந்ததும் சிறிதளவு கறிவேப்பில்லை தூவி இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement